எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இதன்படி, பதிவு செய்யப்பட்டுள்ள 80 அரசியல் கட்சிகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழு தலைவரை அடுத்த வாரம் சந்திக்க உள்ளனர்.
இந்த ஆண்டு ஒக்டோம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டியுள்ளது.
மேலும், தேர்தல்கள், வாக்காளர் பதிவு தொடர்பிலான பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
இந்த சந்திப்பு இம்மாதம் 27 ஆம் திகதி அல்லது மார்ச் மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் - அரசியல் கட்சிகளுக்கு ஆணைக்குழு அழைப்பு. எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.எதிர்வரும் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது.இதன்படி, பதிவு செய்யப்பட்டுள்ள 80 அரசியல் கட்சிகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழு தலைவரை அடுத்த வாரம் சந்திக்க உள்ளனர்.இந்த ஆண்டு ஒக்டோம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்த வேண்டியுள்ளது.மேலும், தேர்தல்கள், வாக்காளர் பதிவு தொடர்பிலான பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.இந்த சந்திப்பு இம்மாதம் 27 ஆம் திகதி அல்லது மார்ச் மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.