• Nov 17 2024

வரி அதிகரிப்பால் விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்கள் கடுமையாக பாதிப்பு- நாமல் சுட்டிக்காட்டு..!

Sharmi / Aug 27th 2024, 4:32 pm
image

நாட்டில் வரி அதிகரிப்பால் விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குருநாகல் - ரிதீகம பகுதியில் நேற்றையதினம்(26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அநீதியான வகையில் வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில்  சில தலைவர்கள் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக இரண்டு யுக்திகளைக் கையாள்கின்றனர்.

ஒருபுறம் அநீதியான வகையில் வரி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும், மறுபுறம் அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என கருதுகிறார்கள்.

நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் வகையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேவேளை, எதிர்கால சந்ததியினரின் வளமான எதிர்காலத்துக்கான பொறுப்பைத் தாம் ஏற்கவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்பால் விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்கள் கடுமையாக பாதிப்பு- நாமல் சுட்டிக்காட்டு. நாட்டில் வரி அதிகரிப்பால் விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாக  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.குருநாகல் - ரிதீகம பகுதியில் நேற்றையதினம்(26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நாட்டில் தற்போது அநீதியான வகையில் வரி கொள்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.நாட்டில்  சில தலைவர்கள் அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக இரண்டு யுக்திகளைக் கையாள்கின்றனர்.ஒருபுறம் அநீதியான வகையில் வரி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும், மறுபுறம் அரச சொத்துக்களை விற்பனை செய்ய வேண்டும் என கருதுகிறார்கள்.நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் வகையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அதேவேளை, எதிர்கால சந்ததியினரின் வளமான எதிர்காலத்துக்கான பொறுப்பைத் தாம் ஏற்கவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement