• Jun 16 2026

யால தேசிய பூங்காவில் பரபரப்பு – விதிமீறி அதிகாரிகளை மிரட்டிய சுற்றுலாப் பயணிகள் கைது

Chithra / Jun 15th 2026, 2:03 pm
image

யால தேசிய பூங்காவில் வனவிலங்கு சட்டங்களை மீறியதாக கூறப்படும் ஐந்து சுற்றுலா பயணிகளை வனவிலங்கு அதிகாரிகள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

 

சபாரிக்காக வந்த இரண்டு ஜீப் வண்டிகளில் பயணித்த குழுவினர் பூங்கா விதிகளை மீறி நடமாடியதுடன், வனவிலங்கு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்தச் சம்பவம் யால தேசிய சரணாலயத்தி 'சுது வெலிமுல்ல' பகுதியில் பதிவாகியுள்ளது. 


பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.


எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகள் குறித்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அந்த ஜீப் வண்டிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதேவேளை, யால ஜீப் சங்கங்களின் கூட்டமைப்பு குறிப்பிடுகையில், யால சரணாலயத்திற்குள் ஜீப் சாரதியோ அல்லது வேறு நபரோ விதிகளை மீறினால், அவர்களைக் கைது செய்வதற்கும், சம்பந்தப்பட்ட ஜீப் வண்டிகளுக்கு சஃபாரி சேவைத் தடை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 


யால தேசிய பூங்காவில் பரபரப்பு – விதிமீறி அதிகாரிகளை மிரட்டிய சுற்றுலாப் பயணிகள் கைது யால தேசிய பூங்காவில் வனவிலங்கு சட்டங்களை மீறியதாக கூறப்படும் ஐந்து சுற்றுலா பயணிகளை வனவிலங்கு அதிகாரிகள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். சபாரிக்காக வந்த இரண்டு ஜீப் வண்டிகளில் பயணித்த குழுவினர் பூங்கா விதிகளை மீறி நடமாடியதுடன், வனவிலங்கு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தச் சம்பவம் யால தேசிய சரணாலயத்தி 'சுது வெலிமுல்ல' பகுதியில் பதிவாகியுள்ளது. பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகள் குறித்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அந்த ஜீப் வண்டிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதேவேளை, யால ஜீப் சங்கங்களின் கூட்டமைப்பு குறிப்பிடுகையில், யால சரணாலயத்திற்குள் ஜீப் சாரதியோ அல்லது வேறு நபரோ விதிகளை மீறினால், அவர்களைக் கைது செய்வதற்கும், சம்பந்தப்பட்ட ஜீப் வண்டிகளுக்கு சஃபாரி சேவைத் தடை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement