• Jan 05 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு இழப்பீடு - மதிப்பீடு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

Chithra / Dec 19th 2024, 1:33 pm
image


கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை காணிகளின் இழப்பீடு தொடர்பாக, மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட கமத்தொழில் மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையின் உதவி பணிப்பாளர் கே. எல். அன்சார் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில், கிண்ணியா பிரதேச செயலக பிரிவு உட்பட்ட, வன்னியனார்மடு விவசாய சம்மேளன பிரிவில் உள்ள, பாதிகாப்பட்ட சிறுபோக நெற்காணிகள் இன்று திருகோணமலை மாவட்ட 

கமத்தொழில் மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபை குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டது.

இதன்போது, வன்னியனார்மடு பிரதேசத்தில் சுமார் 700 ஏக்கர் வயல் காணிகள் உள்ளன என்றும், அதில் 50 வீதமான வயல் நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,

ஏனையவை பகுதியளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வன்னியனார்மடு விவசாய சம்மேளன தலைவர் கே. எம். ராசிக் பரீட் தெரிவித்தார்.

கடந்த 16ஆம் திகதி முதல் மாவட்ட அடிப்படையில், ஒவ்வொரு கமநல சேவை பிரிவுகளிலும், இழப்பீடு தொடர்பாக, இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருகோணமலை மாவட்ட கமத்தொழில் மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையின் உதவி பணிப்பாளர் கே. எல். அன்சார் தெரிவித்தார்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கு இழப்பீடு - மதிப்பீடு செய்யும் நடவடிக்கை ஆரம்பம் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண்மை காணிகளின் இழப்பீடு தொடர்பாக, மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.திருகோணமலை மாவட்ட கமத்தொழில் மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையின் உதவி பணிப்பாளர் கே. எல். அன்சார் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதன் அடிப்படையில், கிண்ணியா பிரதேச செயலக பிரிவு உட்பட்ட, வன்னியனார்மடு விவசாய சம்மேளன பிரிவில் உள்ள, பாதிகாப்பட்ட சிறுபோக நெற்காணிகள் இன்று திருகோணமலை மாவட்ட கமத்தொழில் மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபை குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டது.இதன்போது, வன்னியனார்மடு பிரதேசத்தில் சுமார் 700 ஏக்கர் வயல் காணிகள் உள்ளன என்றும், அதில் 50 வீதமான வயல் நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,ஏனையவை பகுதியளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வன்னியனார்மடு விவசாய சம்மேளன தலைவர் கே. எம். ராசிக் பரீட் தெரிவித்தார்.கடந்த 16ஆம் திகதி முதல் மாவட்ட அடிப்படையில், ஒவ்வொரு கமநல சேவை பிரிவுகளிலும், இழப்பீடு தொடர்பாக, இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருகோணமலை மாவட்ட கமத்தொழில் மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையின் உதவி பணிப்பாளர் கே. எல். அன்சார் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now