ரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை ஜூலை 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த முறைப்பாடு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விடயங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், அதன் முன்னேற்றத்தை அறிக்கையிடுவதற்கு திகதியொன்றை வழங்குமாறும் கோரியிருந்தனர்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், முறைப்பாட்டை ஜூலை 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கத் திகதியிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிடுமாறும் உத்தரவிட்டார்.
ராஜிதவுக்கு எதிரான முறைப்பாடு மீண்டும் விசாரணைக்கு ரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை ஜூலை 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த முறைப்பாடு இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது விடயங்களை முன்வைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும், அதன் முன்னேற்றத்தை அறிக்கையிடுவதற்கு திகதியொன்றை வழங்குமாறும் கோரியிருந்தனர். முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், முறைப்பாட்டை ஜூலை 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கத் திகதியிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கையிடுமாறும் உத்தரவிட்டார்.