மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு இயந்திரம் ஒன்றின் ஊடாக கொங்கிறீட் இட சென்ற போது,
கட்டுமான கட்டிடத்தை அண்டிய குழந்தை வார்டின் கூரை மீது கொங்கிறீட் கலவை தட்டொன்று விழுந்து, குழந்தை வார்டின் கூரை இடிந்துள்ளது.
இதன்போது, வார்டில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் சிலர் மீது கொங்கிறீட் கலவை விழுந்துள்ளது.
இன்று (30) காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக மூன்று தாய்மார்கள் மற்றும் மூன்று சிசுக்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக, வார்டில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் தற்போது வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மீது இடிந்து விழுந்த கொங்கிறீட் கலவை பொது வைத்தியசாலையில் நடந்த விபரீதம் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு இயந்திரம் ஒன்றின் ஊடாக கொங்கிறீட் இட சென்ற போது, கட்டுமான கட்டிடத்தை அண்டிய குழந்தை வார்டின் கூரை மீது கொங்கிறீட் கலவை தட்டொன்று விழுந்து, குழந்தை வார்டின் கூரை இடிந்துள்ளது.இதன்போது, வார்டில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் சிலர் மீது கொங்கிறீட் கலவை விழுந்துள்ளது. இன்று (30) காலை இடம்பெற்ற இந்த விபத்து காரணமாக மூன்று தாய்மார்கள் மற்றும் மூன்று சிசுக்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.விபத்து காரணமாக, வார்டில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் தற்போது வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் இன்றி கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.