மன்னாரில் அரசியல் கட்சியொன்றின் மாவட்ட இணைப்பாளரின் அத்துமீறிய செயலால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மன்னார் நகர சபைக்கு சொந்தமான பிரதேச செயலக வீதியில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகர சபையால் நாள் தோறும் அனுமதி வழங்கப்பட்டு அவற்றுக்கான பற்றுசீட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் வருட இறுதியில் குத்தகை அடிப்படையில் கடைகள் விற்பனை செய்வதற்காக 10-15 நாட்கள் குறித்த நாள் வியாபரிகளை வேறு இடங்களில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகரசபை கோரும். அவ்வாறு நகரசபை கோரும் போது நாள் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வேறு இடங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருட இறுதி சந்தை நிறைவடைந்ததும் மீண்டும் அதே பகுதியில் நகரசபையின் அனுமதியுடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.
ஆனால், இம்முறை அப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 30 க்கு மேற்பட்ட நாள் வியாபாரிகள் நகரசபையின் கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு சென்ற போதிலும் தாங்களை காணொளி மூலம் பகிரங்கமாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என வெளிப்படுத்திய சிலர் அரசியல் தலையீட்டை உட்புகுத்தி குறித்த கடைகளில் இருந்து வெளியேற மறுத்தனர்
இதனை அடுத்து குறித்த விடயம் சட்ட விரோதம் என்ற அடிப்படையில் மன்னார் பொலிஸாரின் உதவியுடன் குறித்த கடைகளை மன்னார் நகரசபை அகற்ற முற்றபட்ட வேளை குறிப்பிட்ட சில வியாபாரிகள் பொலிஸார் மற்றும் நகரசபை செயளாலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் ஆளுநரிடம் பேசி விட்டதாகவும் வியாபர நிலையங்களை மூட முடியாது எனவும் தெரிவித்தனர்
இந்த நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என தெரிவித்த நபர் சம்மந்தமே இல்லாமல் குறித்த விடயத்தில் தலையிட்டதுடன் 45 வியாபாரிகள் தொழில் செய்த குறித்த பகுதியில் வெறுமனே தங்கள் கட்சி சார்பான 11 பேருக்கும் கடைகள் வழங்க ஆளுநரிடம் அனுமதி பெறப்பட்டு விட்டதாகவும் அது தொடர்பில் எழுத்து மூலம் ஆளுநர் தெரியப்படுத்துவார் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் 11 பேர் தவிர்ந்த ஏனைய வியாபரிகள் தாங்கள் என்ன செய்வது என குறித்த இணைப்பாளருடன் முரண்பட்ட நிலையில் அவர்களை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.
அதேநேரம் தான் பேசிய விடயங்களை காணொளிகளாக பதிவு செய்யாமல் நிறுத்தியதுடன் கணொளி எடுக்க முயன்ற ஊடகவியலாளரின் தொலைபேசியையும் தட்டிவிட முயற்சி செய்ததுடன் நகரசபை செயலாளரை தனது பணியாளர் போல் தனது வாகனத்தில் அழைத்து செல்லவும் முற்பட்டார்
இந்த நிலையில் எழுத்து மூலமான எந்த ஒரு அறிவுறுத்தலும் ஆளுநரிடம் இருந்து வழங்கப்படாவிட்டால் என்னால் சட்டவிரோதமான இந்த கடைகளுக்கு அனுமதி வழங்க முடியாது என நகரசபை செயலாளர் பகிரங்கமாக தெரியப்படுத்தினர்.
இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பெயரை பயன்படுத்தி ஆளுநர் வரை சென்ற நிலையில் குறித்த அனுமதியை வழங்க ஆளுநரும் மறுத்த நிலையில் தற்போது குறித்த 11 வியாபாரிகளும் குத்தகைக்கு விடப்படும் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஆண்டு தோறும் மன்னார் நகர சபைக்கு குறித்த வீதியில் 10 தொடக்கம் 15 நாட்கள் பண்டிகைகால வியாபார நடவடிக்கைக்கு கடைகள் குத்தகைக்கு வழங்கப்படுவதனால் சுமார் 2 கோடி வரை வருமானம் கிடைக்க பெறுவதுடன் குறித்த வருமானத்தின் ஊடாக உரிய விதமாக அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
குறித்த 11 வியாபரிகளும் வெளியேற மறுத்த பகுதியில் மாத்திரம் வருட இறுதி சந்தையின் போது கடைகள் 30 தொடக்கம் 40 இலட்சம் வரையில் விற்பனையாகும் இவ்வாறு ஒரு கட்சி சார்பானவர்களுக்காக கடைகளை அப்புறப்படுத்தாமல் விடுவதன் ஊடாக பாரிய அளவு வருமானம் நகரசபைக்கு இழக்கப்படும் என்பதுடன் குத்தகைக்கு வழங்கும் செயற்பாடும் முழுமையாக பாதிப்படையும் என்பதன் அடிப்படையில் குறித்த 11 வியாபாரிகளும் ஆளுநர் வரை சென்ற போதிலும் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் தற்காலிக வியாபார நிலைய வியாபாரிகளால் குழப்ப நிலை. மன்னாரில் அரசியல் கட்சியொன்றின் மாவட்ட இணைப்பாளரின் அத்துமீறிய செயலால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மன்னார் நகர சபைக்கு சொந்தமான பிரதேச செயலக வீதியில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நகர சபையால் நாள் தோறும் அனுமதி வழங்கப்பட்டு அவற்றுக்கான பற்றுசீட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.இருப்பினும் வருட இறுதியில் குத்தகை அடிப்படையில் கடைகள் விற்பனை செய்வதற்காக 10-15 நாட்கள் குறித்த நாள் வியாபரிகளை வேறு இடங்களில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகரசபை கோரும். அவ்வாறு நகரசபை கோரும் போது நாள் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் வேறு இடங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருட இறுதி சந்தை நிறைவடைந்ததும் மீண்டும் அதே பகுதியில் நகரசபையின் அனுமதியுடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.ஆனால், இம்முறை அப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 30 க்கு மேற்பட்ட நாள் வியாபாரிகள் நகரசபையின் கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு சென்ற போதிலும் தாங்களை காணொளி மூலம் பகிரங்கமாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என வெளிப்படுத்திய சிலர் அரசியல் தலையீட்டை உட்புகுத்தி குறித்த கடைகளில் இருந்து வெளியேற மறுத்தனர்இதனை அடுத்து குறித்த விடயம் சட்ட விரோதம் என்ற அடிப்படையில் மன்னார் பொலிஸாரின் உதவியுடன் குறித்த கடைகளை மன்னார் நகரசபை அகற்ற முற்றபட்ட வேளை குறிப்பிட்ட சில வியாபாரிகள் பொலிஸார் மற்றும் நகரசபை செயளாலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தாங்கள் ஆளுநரிடம் பேசி விட்டதாகவும் வியாபர நிலையங்களை மூட முடியாது எனவும் தெரிவித்தனர்இந்த நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என தெரிவித்த நபர் சம்மந்தமே இல்லாமல் குறித்த விடயத்தில் தலையிட்டதுடன் 45 வியாபாரிகள் தொழில் செய்த குறித்த பகுதியில் வெறுமனே தங்கள் கட்சி சார்பான 11 பேருக்கும் கடைகள் வழங்க ஆளுநரிடம் அனுமதி பெறப்பட்டு விட்டதாகவும் அது தொடர்பில் எழுத்து மூலம் ஆளுநர் தெரியப்படுத்துவார் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் 11 பேர் தவிர்ந்த ஏனைய வியாபரிகள் தாங்கள் என்ன செய்வது என குறித்த இணைப்பாளருடன் முரண்பட்ட நிலையில் அவர்களை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.அதேநேரம் தான் பேசிய விடயங்களை காணொளிகளாக பதிவு செய்யாமல் நிறுத்தியதுடன் கணொளி எடுக்க முயன்ற ஊடகவியலாளரின் தொலைபேசியையும் தட்டிவிட முயற்சி செய்ததுடன் நகரசபை செயலாளரை தனது பணியாளர் போல் தனது வாகனத்தில் அழைத்து செல்லவும் முற்பட்டார்இந்த நிலையில் எழுத்து மூலமான எந்த ஒரு அறிவுறுத்தலும் ஆளுநரிடம் இருந்து வழங்கப்படாவிட்டால் என்னால் சட்டவிரோதமான இந்த கடைகளுக்கு அனுமதி வழங்க முடியாது என நகரசபை செயலாளர் பகிரங்கமாக தெரியப்படுத்தினர்.இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் பெயரை பயன்படுத்தி ஆளுநர் வரை சென்ற நிலையில் குறித்த அனுமதியை வழங்க ஆளுநரும் மறுத்த நிலையில் தற்போது குறித்த 11 வியாபாரிகளும் குத்தகைக்கு விடப்படும் பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.ஆண்டு தோறும் மன்னார் நகர சபைக்கு குறித்த வீதியில் 10 தொடக்கம் 15 நாட்கள் பண்டிகைகால வியாபார நடவடிக்கைக்கு கடைகள் குத்தகைக்கு வழங்கப்படுவதனால் சுமார் 2 கோடி வரை வருமானம் கிடைக்க பெறுவதுடன் குறித்த வருமானத்தின் ஊடாக உரிய விதமாக அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுகுறித்த 11 வியாபரிகளும் வெளியேற மறுத்த பகுதியில் மாத்திரம் வருட இறுதி சந்தையின் போது கடைகள் 30 தொடக்கம் 40 இலட்சம் வரையில் விற்பனையாகும் இவ்வாறு ஒரு கட்சி சார்பானவர்களுக்காக கடைகளை அப்புறப்படுத்தாமல் விடுவதன் ஊடாக பாரிய அளவு வருமானம் நகரசபைக்கு இழக்கப்படும் என்பதுடன் குத்தகைக்கு வழங்கும் செயற்பாடும் முழுமையாக பாதிப்படையும் என்பதன் அடிப்படையில் குறித்த 11 வியாபாரிகளும் ஆளுநர் வரை சென்ற போதிலும் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.