• Oct 18 2024

தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைவு தற்போது அவசியமானது - வேலன் சுவாமிகள் வலியுறுத்து samugammedia

Chithra / Apr 16th 2023, 6:18 pm
image

Advertisement

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைவு என்பதே இன்றைய காலத்தில் அவசியமானதென வேலன் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் மரபுரிமையைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அண்மைக் காலமாக தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் மரபுரிமை மற்றும் தொல்லியல் அடக்குமுறைகளைக் கண்டித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் பேராட்டமானது இன்று காலை ஆரம்பிக்கப்பட்டு மாலை 3 மணியளவில் நிறைவடைந்தது.

இதன்போது எமது சமூகத்தின் செய்தி பிரிவு எழுப்பியிருந்த கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரச இயந்திரத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கப்படுவதாகவும் நீதிக்கு புறம்பாக, அடாத்தான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக வேலன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக சிங்கள பேரினவாதம் திட்டமிட்ட இனப்பரம்பலையும் முன்னெடுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய காலத்தில்கூட மதவாத்தினாலும் பிரதேச வாதத்தின் ஊடாகவும் சாதிய வாதத்தின் ஊடாகவும் தமிழர்களின் ஒன்றுமைகள் உடைக்கப்படுவதாகவும் வேலன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்

தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைவு தற்போது அவசியமானது - வேலன் சுவாமிகள் வலியுறுத்து samugammedia ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஒருங்கிணைவு என்பதே இன்றைய காலத்தில் அவசியமானதென வேலன் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.தமிழர் மரபுரிமையைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அண்மைக் காலமாக தமிழர்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் மரபுரிமை மற்றும் தொல்லியல் அடக்குமுறைகளைக் கண்டித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் பேராட்டமானது இன்று காலை ஆரம்பிக்கப்பட்டு மாலை 3 மணியளவில் நிறைவடைந்தது.இதன்போது எமது சமூகத்தின் செய்தி பிரிவு எழுப்பியிருந்த கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இலங்கையின் அரச இயந்திரத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கப்படுவதாகவும் நீதிக்கு புறம்பாக, அடாத்தான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக வேலன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக சிங்கள பேரினவாதம் திட்டமிட்ட இனப்பரம்பலையும் முன்னெடுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.இன்றைய காலத்தில்கூட மதவாத்தினாலும் பிரதேச வாதத்தின் ஊடாகவும் சாதிய வாதத்தின் ஊடாகவும் தமிழர்களின் ஒன்றுமைகள் உடைக்கப்படுவதாகவும் வேலன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement