• Jan 31 2025

அநுரவின் முயற்சிக்கு தடைபோடுகிறது அரசியலமைப்பு; முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதில் சிக்கல்

Chithra / Jan 29th 2025, 12:49 pm
image

 

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடையாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விவகாரத்தை ஆராய்வதற்காக அரசங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவால் இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதியளித்தபடி, தேவையற்ற செலவுகளை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து ஆராய்ந்த குழுவினர் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் முன்னாள் ஜனாதிபதிகளிற்கான சில சலுகைகளை  குறைக்கமுடியாது என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

அரசமைப்பின் 36 வது பிரிவில் இது குறித்து சில விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதை அந்த குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசமைப்பின் இந்த பிரிவுகளை மாற்றுவது பல காரணங்களால் அரசாங்கத்திற்கு சவாலான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதிகளிற்கான உரிமை சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வாடகைகளை வசூலிக்காமல் வீடுகளை வழங்கவேண்டும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,

அரசியலமைப்பின்படி முன்னாள் ஜனாதிபதிகளிற்கான ஓய்வூதியம்   போன்ற சில சலுகைகளை உடனடியாக இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான ஓய்வூதியங்களை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அநுரவின் முயற்சிக்கு தடைபோடுகிறது அரசியலமைப்பு; முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதில் சிக்கல்  முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களை குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு தடையாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விவகாரத்தை ஆராய்வதற்காக அரசங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவால் இந்த விடயம் அவதானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது வாக்குறுதியளித்தபடி, தேவையற்ற செலவுகளை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து ஆராய்ந்த குழுவினர் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் முன்னாள் ஜனாதிபதிகளிற்கான சில சலுகைகளை  குறைக்கமுடியாது என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.அரசமைப்பின் 36 வது பிரிவில் இது குறித்து சில விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதை அந்த குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.அரசமைப்பின் இந்த பிரிவுகளை மாற்றுவது பல காரணங்களால் அரசாங்கத்திற்கு சவாலான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் ஜனாதிபதிகளிற்கான உரிமை சட்டத்தின்படி, முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வாடகைகளை வசூலிக்காமல் வீடுகளை வழங்கவேண்டும்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்,அரசியலமைப்பின்படி முன்னாள் ஜனாதிபதிகளிற்கான ஓய்வூதியம்   போன்ற சில சலுகைகளை உடனடியாக இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான ஓய்வூதியங்களை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement