• Sep 24 2025

முல்லைத்தீவு வைத்தியசாலையில் இந்திய உதவியுடன் விடுதி நிர்மாணம்!

Chithra / Sep 23rd 2025, 8:50 pm
image

 

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண் மற்றும் பெண் நோயாளர்களுக்காக இந்திய உதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடி விடுதிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாகும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  

பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது,  இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண், பெண் நோயாளர்களுக்கான விடுதிக்கான நிரந்தர கட்டிடம் இல்லாமை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண், பெண் நோயாளர்களுக்கான தற்காலிக விடுதி இயங்கி வருகின்றது. இந்நிலையில் அங்கே இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ் நான்கு மாடி விடுதி கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

அந்த திட்டத்தை செயற்படுத்த அனுமதி வழங்கப்பட்டள்ளதுடன், இது தொடர்பான இருதரப்பு உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.  

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவை இந்திய உதவித் திட்டத்தில் நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அடுத்ததாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.

வெளிவிவகார அமைச்சு மற்றும்  சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்த பின்னர் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


முல்லைத்தீவு வைத்தியசாலையில் இந்திய உதவியுடன் விடுதி நிர்மாணம்  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண் மற்றும் பெண் நோயாளர்களுக்காக இந்திய உதவியில் நிர்மாணிக்கப்படவுள்ள நான்கு மாடி விடுதிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாகும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது,  இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண், பெண் நோயாளர்களுக்கான விடுதிக்கான நிரந்தர கட்டிடம் இல்லாமை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஆண், பெண் நோயாளர்களுக்கான தற்காலிக விடுதி இயங்கி வருகின்றது. இந்நிலையில் அங்கே இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ் நான்கு மாடி விடுதி கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.அந்த திட்டத்தை செயற்படுத்த அனுமதி வழங்கப்பட்டள்ளதுடன், இது தொடர்பான இருதரப்பு உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளது.  மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவை இந்திய உதவித் திட்டத்தில் நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், அடுத்ததாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்.வெளிவிவகார அமைச்சு மற்றும்  சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்த பின்னர் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement