• Apr 15 2026

நாட்டில் தொடரும் கனமழை: மகாவலி கங்கையில் வெள்ள அபாயம்! 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Chithra / Feb 22nd 2026, 8:08 am
image



இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு 

மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. 


நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.


மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.


இது  நாளை (23) நள்ளிரவு 12.00 மணி வரை அமுலில் இருக்கும்


கிண்ணியா, மூதூர், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேசங்கள் 

இதனால் பாதிப்படைவாய்ப்புள்ளது.


சோமாவதி ரஜமகா விகாரையின் நுழைவாயில் மற்றும் மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் கல்லெல்ல பகுதியில் வெள்ள நிலைமை ஏற்படலாம் என்பதால், விகாரைக்குச் செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கடும் மழை காரணமாக நிலப்பகுதிகள் ஊறிப்போயுள்ள நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பின்வரும் மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது:


கொழும்பு – கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவா முதல் மாவனெல்லை வரையிலான 

பகுதியில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


இதனால் வாகனங்களைச் செலுத்தும் போது வேகத்தைக் கட்டுப்படுத்தவும். சரிவுகள் மற்றும் ஆபத்தான வளைவுகளில் தரித்து நிற்பதைத் தவிர்க்கவும். முன்னால் செல்லும் வாகனங்களுடன் போதிய இடைவெளியைப் பேணவும்.


கண்டி மாவட்டத்தின் யட்டினுவாரா பிரதேச செயலாளர் பிரிவுக்கு மூன்றாம் நிலை (Red Alert) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள அபாயகரமான சரிவுகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக 

பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


பதுளை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கும் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:


மோசமான காலநிலை நிலவும் போது தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உடனுக்குடன் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும்.


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.


மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெட்டவெளிகளில் நிற்பதைத் தவிர்க்கவும், மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை எடுக்கவும்  கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் தொடரும் கனமழை: மகாவலி கங்கையில் வெள்ள அபாயம் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.மகாவலி கங்கையின் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.இது  நாளை (23) நள்ளிரவு 12.00 மணி வரை அமுலில் இருக்கும்கிண்ணியா, மூதூர், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேசங்கள் இதனால் பாதிப்படைவாய்ப்புள்ளது.சோமாவதி ரஜமகா விகாரையின் நுழைவாயில் மற்றும் மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் கல்லெல்ல பகுதியில் வெள்ள நிலைமை ஏற்படலாம் என்பதால், விகாரைக்குச் செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கடும் மழை காரணமாக நிலப்பகுதிகள் ஊறிப்போயுள்ள நிலையில், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பின்வரும் மாவட்டங்களுக்கு உச்சக்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது:கொழும்பு – கண்டி பிரதான வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவா முதல் மாவனெல்லை வரையிலான பகுதியில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களைச் செலுத்தும் போது வேகத்தைக் கட்டுப்படுத்தவும். சரிவுகள் மற்றும் ஆபத்தான வளைவுகளில் தரித்து நிற்பதைத் தவிர்க்கவும். முன்னால் செல்லும் வாகனங்களுடன் போதிய இடைவெளியைப் பேணவும்.கண்டி மாவட்டத்தின் யட்டினுவாரா பிரதேச செயலாளர் பிரிவுக்கு மூன்றாம் நிலை (Red Alert) மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள அபாயகரமான சரிவுகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பதுளை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கும் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:மோசமான காலநிலை நிலவும் போது தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உடனுக்குடன் பின்பற்றுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெட்டவெளிகளில் நிற்பதைத் தவிர்க்கவும், மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை எடுக்கவும்  கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement