புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை 2173 குடும்பங்களைச் சேர்ந்த 8810 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 29 கிராம சேவகர் பிரிவுகளில் 1276 குடும்பங்களை சேர்ந்த 5744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 21 கிராம சேவகர் பிரிவுகளில் 293 குடும்பங்களைச் சேர்ந்த 960 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேரும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 557 பேரும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 251 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மஹாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளில் 305 குடும்பங்களைச் சேர்ந்த 965 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகளில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஒரு கிராம சேவகர் பிரிவுகளில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் 18 பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.
இவ்வாறு பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், சமைத்த உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தொடரும் சீரற்ற காலநிலை- புத்தளத்தில் 8,810 பேர் பாதிப்பு. புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஒன்பது பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை 2173 குடும்பங்களைச் சேர்ந்த 8810 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.புத்தளம் மாவட்டத்தில் உள்ள நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 29 கிராம சேவகர் பிரிவுகளில் 1276 குடும்பங்களை சேர்ந்த 5744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 21 கிராம சேவகர் பிரிவுகளில் 293 குடும்பங்களைச் சேர்ந்த 960 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேரும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 135 குடும்பங்களைச் சேர்ந்த 557 பேரும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 251 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மஹாவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 10 கிராம சேவகர் பிரிவுகளில் 305 குடும்பங்களைச் சேர்ந்த 965 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 2 கிராம சேவகர் பிரிவுகளில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 129 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஒரு கிராம சேவகர் பிரிவுகளில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு, நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் 18 பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.இவ்வாறு பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், சமைத்த உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.