அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேதன பிரச்சினையை நிவர்த்தி செய்யுமாறு கோரி கடந்த காலங்களில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.அதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.வேதன பிரச்சினையை நிவர்த்தி செய்யுமாறு கோரி கடந்த காலங்களில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.