• Nov 27 2024

வவுனியாவில் தொடர் மழை; வான் பாயும் குளங்கள்..!

Sharmi / Nov 26th 2024, 6:53 pm
image

வவுனியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக 120 இற்கும் மேற்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டி வான் பாய்வதுடன், 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. 

இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், வவுனியாக்குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன், வான் பாய ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் 120 இற்கும் மேற்ப்பட்ட குளங்கள் தனது முழுக்கொள்ளளவை எட்டி மேலதிக நீர் வெளியேறி வருவதுடன், அநேகமான குளங்களில் 90 சதவீதமான அளவு நீர் நிறைந்துள்ளது.

இதுவரை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம், அருவித்தோட்டம் - நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

அவற்றைச் சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, தொடர்மழை காரணமாக வவுனியாவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக வவுனியாவில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரும், புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

வெண்கல செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் அதிவேக காற்றின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், ஒரு வீடும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் தொடர் மழை; வான் பாயும் குளங்கள். வவுனியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக 120 இற்கும் மேற்பட்ட குளங்கள் முழுக்கொள்ளவை எட்டி வான் பாய்வதுடன், 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.இந்நிலையில், வவுனியாக்குளம் தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதுடன், வான் பாய ஆரம்பித்துள்ளது.இதேவேளை, வவுனியா மாவட்டத்தின் 120 இற்கும் மேற்ப்பட்ட குளங்கள் தனது முழுக்கொள்ளளவை எட்டி மேலதிக நீர் வெளியேறி வருவதுடன், அநேகமான குளங்களில் 90 சதவீதமான அளவு நீர் நிறைந்துள்ளது.இதுவரை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம், அருவித்தோட்டம் - நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றைச் சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அதேவேளை, தொடர்மழை காரணமாக வவுனியாவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.தொடர் மழை காரணமாக வவுனியாவில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், தாழ்நிலப் பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பரந்தன் கிராம அலுவலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒரு அங்கத்தவரும், புளியங்குளம் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.வெண்கல செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் அதிவேக காற்றின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், ஒரு வீடும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement