• Jan 26 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சை கருத்து; சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார் மைத்திரி!

Chithra / Mar 24th 2024, 11:56 am
image

 

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நேற்று (23) பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சை கருத்து; சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார் மைத்திரி  உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.இதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கருத்து தெரிவித்தார்.இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நேற்று (23) பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement