• May 18 2024

இலங்கையில் பாப்பிலோமா தடுப்பூசி பற்றாக்குறை! முடங்கியுள்ள தடுப்பூசி போடும் பணி

Chithra / Mar 24th 2024, 11:15 am
image

Advertisement


மனித பாப்பிலோமா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை  இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன் தலைவர் நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசி போடும் பணி முடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால கூறுகையில், 

பல மாதங்களாக இது தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

எவ்வாறாயினும், முன்பதிவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மேலும் ஒன்றரை வருட காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பாப்பிலோமா தடுப்பூசி பற்றாக்குறை முடங்கியுள்ள தடுப்பூசி போடும் பணி மனித பாப்பிலோமா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை  இருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அதன் தலைவர் நிபுணர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசி போடும் பணி முடங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால கூறுகையில், பல மாதங்களாக இது தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.எவ்வாறாயினும், முன்பதிவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.மேலும் ஒன்றரை வருட காலத்திற்கு தேவையான தடுப்பூசிகள் இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement