கோப் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் அண்மையில் கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தனவை நியமித்தது.
இந்த நியமனத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு குழுவின் உறுப்பினர்கள் பலர் பதவி விலகியுள்ளனர்.
இவ்வாறான ஓர் பின்னணியிலும் தாம் பதவி விலகப் போவதில்லை என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை வாக்குகளினால் தாம் இந்தப் பதவிக்கு தெரிவானதாகவும், அதனால் பதவி விலகும் உத்தேசமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சினை இருந்தால் சஜித் பிரேமதாசவை குழுவின் பிரதிநிதியாக நியமித்து அவருக்கு தலைமைப் பதவியை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
கோப் குழுவிலிருந்து பதவி விலகப் போவதில்லை ரோஹித்த அதிரடி அறிவிப்பு கோப் குழுவின் தலைமைப் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.அரசாங்கம் அண்மையில் கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்தனவை நியமித்தது.இந்த நியமனத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு குழுவின் உறுப்பினர்கள் பலர் பதவி விலகியுள்ளனர்.இவ்வாறான ஓர் பின்னணியிலும் தாம் பதவி விலகப் போவதில்லை என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.பெரும்பான்மை வாக்குகளினால் தாம் இந்தப் பதவிக்கு தெரிவானதாகவும், அதனால் பதவி விலகும் உத்தேசமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமது நியமனம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு பிரச்சினை இருந்தால் சஜித் பிரேமதாசவை குழுவின் பிரதிநிதியாக நியமித்து அவருக்கு தலைமைப் பதவியை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.