• May 04 2024

இலங்கையர்களின் சீனி பாவனை தொடர்பில் அதிர்ச்சித் தகவல்..! ஏற்பட்டுள்ள ஆபத்து

Chithra / Mar 22nd 2024, 9:44 am
image

Advertisement

 

இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதால் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை ஒருவர் உட்கொள்வதாக சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் வருடத்திற்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சீனியின் அளவை 13 கிலோ என வரையறுத்துள்ளது.

எனினும் இலங்கையர் ஒருவர் வருடாந்தம் மூன்று மடங்கு சீனியை அதாவது 39 கிலோ சீனியை உட்கொள்வதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதிகளவு சீனி பாவனையால் இலங்கையில் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

எனினும் இலங்கையில் உள்ள மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இரவு உறங்க செல்லும் முன் பல் துலக்குவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வாய் சுகாதார தினத்திற்காக நடைபெற்ற மாநாட்டில் நிபுணர் இந்த தகவலை வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கையர்களின் சீனி பாவனை தொடர்பில் அதிர்ச்சித் தகவல். ஏற்பட்டுள்ள ஆபத்து  இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதால் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்படும் சீனியை விட மூன்று மடங்குக்கும் அதிகமான சீனியை ஒருவர் உட்கொள்வதாக சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.உலக சுகாதார ஸ்தாபனம் வருடத்திற்கு ஒருவர் உட்கொள்ள வேண்டிய சீனியின் அளவை 13 கிலோ என வரையறுத்துள்ளது.எனினும் இலங்கையர் ஒருவர் வருடாந்தம் மூன்று மடங்கு சீனியை அதாவது 39 கிலோ சீனியை உட்கொள்வதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்தார்.அதிகளவு சீனி பாவனையால் இலங்கையில் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக வைத்தியர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும் இலங்கையில் உள்ள மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இரவு உறங்க செல்லும் முன் பல் துலக்குவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.உலக வாய் சுகாதார தினத்திற்காக நடைபெற்ற மாநாட்டில் நிபுணர் இந்த தகவலை வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement