• Nov 07 2025

அவசரமா வெளியேறும் கோப்பாய் பொலிசார்; நீதிமன்ற உத்தரவையடுத்து அதிரடி நடவடிக்கை!

shanuja / Oct 15th 2025, 2:47 pm
image

வீடுகளில் இயங்கி வந்த கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. 


யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


கோப்பாய்  பொலிஸ் நிலையம் எட்டு சிவில் மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அந்த வீடுகளில் ஏழு வீடுகளை மீண்டும் அந்த நபர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இதற்கமைய இன்று (15) அந்த வீடுகள் நீதிமன்ற அதிகாரியால் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 


அதன்படி, தற்காலிகமாக அந்தப் பகுதியின் முறைப்பாடுகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் கிடங்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 


இன்னும் இரண்டு மாதங்களில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை மீண்டும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவசரமா வெளியேறும் கோப்பாய் பொலிசார்; நீதிமன்ற உத்தரவையடுத்து அதிரடி நடவடிக்கை வீடுகளில் இயங்கி வந்த கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய்  பொலிஸ் நிலையம் எட்டு சிவில் மக்களுக்கு சொந்தமான எட்டு வீடுகளில் இயங்கி வந்த நிலையில், அந்த வீடுகளில் ஏழு வீடுகளை மீண்டும் அந்த நபர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய இன்று (15) அந்த வீடுகள் நீதிமன்ற அதிகாரியால் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, தற்காலிகமாக அந்தப் பகுதியின் முறைப்பாடுகளை யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் ஆயுதக் கிடங்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை மீண்டும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement