• Apr 25 2026

டிக்கோயா வைத்தியசாலையில் சடலத்திற்கு துஷ்பிரயோகம்.மூன்று ஊழியர்களுக்கு எதிராக விசாரணை!

shanu / Mar 6th 2026, 10:17 pm
image

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆரச்சி இன்று (06) ம் திகதி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விசேட கருத்துக்களை வெளியிட்டார்.


சம்பவத்தின் முக்கிய விபரங்கள் வருமாறு 

சந்தேக நபர்கள் அன்றைய தினம் இரவு வேளையில் 4 தடவைகள் சவ கிடங்கில் நுழைந்த மூன்று ஊழியர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இச் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஊழியர்கள் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அறிவியல் ரீதியான மற்றும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும்,

 

குறைபாடுகளுடன் சடலங்களை முறையாக குளிரூட்டிகளில் வைக்காதது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி தனது அதிருப்தியை வெளியிட்டார்.


குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது கடுமையான தண்டனை வழங்கப்படும். வைத்தியசாலை கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைய விடமாட்டோம். என தெரிவித்துள்ளார். 


டிக்கோயா வைத்தியசாலையில் சடலத்திற்கு துஷ்பிரயோகம்.மூன்று ஊழியர்களுக்கு எதிராக விசாரணை டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆரச்சி இன்று (06) ம் திகதி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் விசேட கருத்துக்களை வெளியிட்டார்.சம்பவத்தின் முக்கிய விபரங்கள் வருமாறு சந்தேக நபர்கள் அன்றைய தினம் இரவு வேளையில் 4 தடவைகள் சவ கிடங்கில் நுழைந்த மூன்று ஊழியர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த ஊழியர்கள் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், அறிவியல் ரீதியான மற்றும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், குறைபாடுகளுடன் சடலங்களை முறையாக குளிரூட்டிகளில் வைக்காதது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி தனது அதிருப்தியை வெளியிட்டார்.குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது கடுமையான தண்டனை வழங்கப்படும். வைத்தியசாலை கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைய விடமாட்டோம். என தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement