• Jan 23 2025

ராஜபக்ஷக்களின் படுதோல்விக்கு ஊழல், மோசடி ஆட்சியே காரணம் - அமைச்சர் சுனில் குமார கமகே

Tharmini / Jan 20th 2025, 4:06 pm
image

ராஜபக்ஷக்களின் ஊழல், மோசடி ஆட்சியே அவர்களின் படுதோல்விக்குப் பிரதான காரணம் என்று இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"கடந்த தேர்தல்களில் ராஜபக்ஷக்கள் வரலாறு காணாத வகையில் படுதோல்வியடைந்துள்ளனர். அவர்களை மக்கள் அடியோடு நிராகரித்து விட்டார்கள். ராஜபக்ஷக்களின் ஊழல், மோசடி ஆட்சியே அவர்களின் படுதோல்விக்குப் பிரதான காரணம்.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ஷக்கள் தேர்தல்களில்  படுதோல்வியடைந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. அவர்கள் இழைத்த குற்றங்களுக்கு தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல், மோசடிகளுக்கு இடமேயில்லை. ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எமது அரசின் பிரதான நோக்கம்." - என்றார்.


ராஜபக்ஷக்களின் படுதோல்விக்கு ஊழல், மோசடி ஆட்சியே காரணம் - அமைச்சர் சுனில் குமார கமகே ராஜபக்ஷக்களின் ஊழல், மோசடி ஆட்சியே அவர்களின் படுதோல்விக்குப் பிரதான காரணம் என்று இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"கடந்த தேர்தல்களில் ராஜபக்ஷக்கள் வரலாறு காணாத வகையில் படுதோல்வியடைந்துள்ளனர். அவர்களை மக்கள் அடியோடு நிராகரித்து விட்டார்கள். ராஜபக்ஷக்களின் ஊழல், மோசடி ஆட்சியே அவர்களின் படுதோல்விக்குப் பிரதான காரணம்.ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ஷக்கள் தேர்தல்களில்  படுதோல்வியடைந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. அவர்கள் இழைத்த குற்றங்களுக்கு தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஊழல், மோசடிகளுக்கு இடமேயில்லை. ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே எமது அரசின் பிரதான நோக்கம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement