கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாகவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருது வெளியிட்டுள்ள அவர்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளில் 114 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்பு மருத்துவக்குழுவினர் மற்றும் செவிலியர்கள் குழு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுவரை 29 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக 29 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கள்ளச்சாராய மரணம் 49 ஆக உயர்வடைந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளதாகவும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருது வெளியிட்டுள்ள அவர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைகளில் 114 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பு மருத்துவக்குழுவினர் மற்றும் செவிலியர்கள் குழு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுவரை 29 பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக 29 பேருக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.