• Nov 22 2024

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு

Chithra / Sep 26th 2024, 6:25 pm
image

  

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பசன் அமரசூரிய இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டார்.

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல்  தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவித்ததாகக் கூறி கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவரை விடுதலை செய்யுமாறு ஞானசார தேரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என இன்று உத்தரவிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு   கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் பசன் அமரசூரிய இன்று வியாழக்கிழமை (26) உத்தரவிட்டார்.2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல்  தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவித்ததாகக் கூறி கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவரை விடுதலை செய்யுமாறு ஞானசார தேரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என இன்று உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement