குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று (09) கைது செய்யப்பட்டார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ஒரு கைதியை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிறு (08) இரவு கைது செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
துஷார உபுல்தெனியவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று (09) கைது செய்யப்பட்டார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த ஒரு கைதியை, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் கடந்த ஞாயிறு (08) இரவு கைது செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட சந்தேகநபரை மீண்டும் கைது செய்வதற்காகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.