• Nov 25 2024

கெஹெலியவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு...!

Sharmi / Feb 19th 2024, 4:33 pm
image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் குறித்த உத்தரவை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்போது கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல் நிலைமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் 9 பேர் கொண்ட நிபுணர் குழுவில் இருதய நோய்கள், எலும்பு நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்களில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும் உள்ளடக்குமாறும் நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கெஹெலியவின் உடல் நிலை தொடர்பிலான விசாரணை அறிக்கைய எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கெஹெலியவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட வைத்திய நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாளிகாகந்த நீதவான் குறித்த உத்தரவை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு பிறப்பித்துள்ளார்.இதேவேளை கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம விடுத்த கோரிக்கையை நீதவான் ஏற்றுக்கொண்டுள்ளார்.இதன்போது கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல் நிலைமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் 9 பேர் கொண்ட நிபுணர் குழுவில் இருதய நோய்கள், எலும்பு நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்களில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியர்களையும் உள்ளடக்குமாறும் நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.மேலும், கெஹெலியவின் உடல் நிலை தொடர்பிலான விசாரணை அறிக்கைய எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement