• Mar 20 2025

வங்கிக் கணக்கு முடக்கம் – கெஹெலியவின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

Chithra / Mar 20th 2025, 1:20 pm
image

 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை இடைநிறுத்திய உத்தரவை மீளப்பெறுமாறு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பல வங்கி கணக்குகள் மற்றும் காப்புறுதி ஒப்பந்தங்களை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்தது.

ரம்புக்வெல்லவின் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கிலும், அவரது ஓய்வூதியமும், அவரது இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்திற்காக பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகையும் வைப்பில் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவின் கீழ் அது முடக்கப்பட்டது.

இந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் முடக்க உத்தரவை நீக்கக் கோரி ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் அண்மையில் ஒரு கோரிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி, முடக்க உத்தரவை நீக்குவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

வங்கிக் கணக்கு முடக்கம் – கெஹெலியவின் கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கை இடைநிறுத்திய உத்தரவை மீளப்பெறுமாறு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பல வங்கி கணக்குகள் மற்றும் காப்புறுதி ஒப்பந்தங்களை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்தது.ரம்புக்வெல்லவின் நாடாளுமன்றக் கிளையில் உள்ள வங்கிக் கணக்கிலும், அவரது ஓய்வூதியமும், அவரது இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்திற்காக பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகையும் வைப்பில் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த உத்தரவின் கீழ் அது முடக்கப்பட்டது.இந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கின் முடக்க உத்தரவை நீக்கக் கோரி ரம்புக்வெல்லவின் சட்டத்தரணிகள் அண்மையில் ஒரு கோரிக்கையை தாக்கல் செய்திருந்தனர்.அதன்படி, முடக்க உத்தரவை நீக்குவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement