• Mar 21 2025

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் சந்திரகுமார் வேட்புமனுத் தாக்கல்..!

Sharmi / Mar 20th 2025, 1:39 pm
image

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்  தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குமான வேட்புமனுக்களை  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் இன்று(20)  காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  தாக்கல் செய்தார்.

இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த முருகேசு சந்திரகுமார்,

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குமான வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளோம்.

இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தமிழ் மண்ணிலே வேறுபட்ட ஒரு முடிவுகளை தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் தேர்தலாக இது அமையும் என நம்புகின்றேன்.

தமிழ் மக்களின் விருப்பம் போலவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பல கட்சிகளை இணைத்து கொண்டதான கூட்டணி போட்டியிடுகின்றது.

தேர்தல் பரப்புரை விடயத்தில் கட்சிகளும் வேட்பாளர்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

எமது கூட்டணியில் கணிசமான பெண்களையும் இளைஞர்களையும் ஈடுபடுத்தியுள்ளோம்.

அரசியல் நாகரிகமாக தமது கருத்துக்களை மக்களுக்கு கூறி வாக்கு சேகரிக்கும் நடைமுறையை அரசியற் கட்சிகள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.



 


ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் சந்திரகுமார் வேட்புமனுத் தாக்கல். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்  தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குமான வேட்புமனுக்களை  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் இன்று(20)  காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  தாக்கல் செய்தார்.இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த முருகேசு சந்திரகுமார்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குமான வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்துள்ளோம்.இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தமிழ் மண்ணிலே வேறுபட்ட ஒரு முடிவுகளை தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் தேர்தலாக இது அமையும் என நம்புகின்றேன்.தமிழ் மக்களின் விருப்பம் போலவே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பல கட்சிகளை இணைத்து கொண்டதான கூட்டணி போட்டியிடுகின்றது.தேர்தல் பரப்புரை விடயத்தில் கட்சிகளும் வேட்பாளர்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.எமது கூட்டணியில் கணிசமான பெண்களையும் இளைஞர்களையும் ஈடுபடுத்தியுள்ளோம்.அரசியல் நாகரிகமாக தமது கருத்துக்களை மக்களுக்கு கூறி வாக்கு சேகரிக்கும் நடைமுறையை அரசியற் கட்சிகள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement