• Nov 23 2024

போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு!!

Tamil nila / Aug 31st 2024, 10:44 pm
image

வவுனியாநகரில் நாளையதினம் ஆர்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு காணாமல்ஆக்கப்பட்டசங்கங்களை சேர்ந்த நால்வருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவுபிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாளையதினம் வவுனியா வருகைதரவுள்ளார். 

இதனையடுத்து பொலிசாரால் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில் வவுனியா வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி  சிவாநந்தன் ஜெனிற்றா,தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர்சங்கத்தின் இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமார்,அந்த சங்கத்தின் தலைவிகாசிப்பிள்ளை ஜெயவனிதா, மற்றும் காணாமல்போன அமைப்பைசேர்ந்த  சண்முகநான் சறோஜாதேவி ஆகியோருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

குறித்த நால்வரும் வவுனியா நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாளையதினம் 01.09.2024 காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணிவரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 106(01) இன் கீழ் தடை விதிக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைஉத்தரவு பத்திரங்கள் அந்தந்த பிரிவுகளைசேர்ந்த பொலிசாரால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு வவுனியாநகரில் நாளையதினம் ஆர்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு காணாமல்ஆக்கப்பட்டசங்கங்களை சேர்ந்த நால்வருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவுபிறப்பித்துள்ளது.ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாளையதினம் வவுனியா வருகைதரவுள்ளார். இதனையடுத்து பொலிசாரால் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியா வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி  சிவாநந்தன் ஜெனிற்றா,தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர்சங்கத்தின் இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமார்,அந்த சங்கத்தின் தலைவிகாசிப்பிள்ளை ஜெயவனிதா, மற்றும் காணாமல்போன அமைப்பைசேர்ந்த  சண்முகநான் சறோஜாதேவி ஆகியோருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  குறித்த நால்வரும் வவுனியா நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாளையதினம் 01.09.2024 காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணிவரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 106(01) இன் கீழ் தடை விதிக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தடைஉத்தரவு பத்திரங்கள் அந்தந்த பிரிவுகளைசேர்ந்த பொலிசாரால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement