நாட்டில் உள்ள காணிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நவம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு காணி அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக்க கணேபோல மற்றும் ஆதித்ய படபெதிகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாட்டில் காணி முகாமைத்துவதற்கான தேசிய திட்டம் இல்லாமை காரணமாக பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரன் தாபரே நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
விவசாய நடவடிக்கைகள், காடுகள், சதுப்பு நிலங்கள், குடியிருப்புகள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலங்கள் மற்றும் அவற்றின் எல்லைகள் முறையாக அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படாததால், நாட்டில் பல சுற்றுச்சூழல் மற்றும் பிற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் நாட்டில் உள்ள நிலங்களிலிருந்து முறையான நன்மைகளைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.
அமைச்சர்கள் உட்பட அரச தரப்பினருக்கு நீதிமன்றம் அழைப்பாணை நாட்டில் உள்ள காணிகளை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நவம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு காணி அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தம்மிக்க கணேபோல மற்றும் ஆதித்ய படபெதிகே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நாட்டில் காணி முகாமைத்துவதற்கான தேசிய திட்டம் இல்லாமை காரணமாக பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரன் தாபரே நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார். விவசாய நடவடிக்கைகள், காடுகள், சதுப்பு நிலங்கள், குடியிருப்புகள் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலங்கள் மற்றும் அவற்றின் எல்லைகள் முறையாக அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்படாததால், நாட்டில் பல சுற்றுச்சூழல் மற்றும் பிற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால் நாட்டில் உள்ள நிலங்களிலிருந்து முறையான நன்மைகளைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்தார்.