• Feb 13 2025

முகம் கழுவச்சென்றவரை இழுத்துச் சென்ற முதலை - தொடரும் தேடுதல் நடவடிக்கை

Chithra / Feb 13th 2025, 11:17 am
image

 

களுத்துறை போதி விகாரைக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் முகம் கழுவச்சென்ற நபரை முதலை இழுத்து சென்ற சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

பாலத்தின் கீழ் முகம் கழுவிக் கொண்டிருந்த போது குறித்த நபரை முதலை ஒன்று திடீரென தாக்கி இழுத்துச் செல்வதை அவதானித்த நபரொருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த இடத்தில் இருந்து பயணப் பை ஒன்றும், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும், இரண்டு வங்கி வைப்பு புத்தகங்களும் கடவுச்சீட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 

களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முகம் கழுவச்சென்றவரை இழுத்துச் சென்ற முதலை - தொடரும் தேடுதல் நடவடிக்கை  களுத்துறை போதி விகாரைக்கு அருகிலுள்ள பாலத்தின் கீழ் முகம் கழுவச்சென்ற நபரை முதலை இழுத்து சென்ற சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.பாலத்தின் கீழ் முகம் கழுவிக் கொண்டிருந்த போது குறித்த நபரை முதலை ஒன்று திடீரென தாக்கி இழுத்துச் செல்வதை அவதானித்த நபரொருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த இடத்தில் இருந்து பயணப் பை ஒன்றும், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும், இரண்டு வங்கி வைப்பு புத்தகங்களும் கடவுச்சீட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement