• Apr 19 2026

உலக சந்தையில் மீண்டும் உயர்ந்த மசகு எண்ணெய் விலை

Oil
Chithra / Mar 26th 2026, 10:35 am
image

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் நேற்று புதன்கிழமையுடன் (25) ஒப்பிடுகையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.


ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 91.39 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இது 1 சதவீத உயர்வாகும்.


ஒரு பீப்பாய் ப்ரெண்ட்  வகை எண்ணெய் விலை 103.3 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.10 சதவீத உயர்வாகும்.


மர்பன் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 105.4 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 14.52 சதவீத வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈராக் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தையடுத்து மசகு எண்ணெய் விலை குறைந்திருந்தது.


இருப்பினும், தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


உலக சந்தையில் மீண்டும் உயர்ந்த மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் நேற்று புதன்கிழமையுடன் (25) ஒப்பிடுகையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 91.39 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இது 1 சதவீத உயர்வாகும்.ஒரு பீப்பாய் ப்ரெண்ட்  வகை எண்ணெய் விலை 103.3 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.10 சதவீத உயர்வாகும்.மர்பன் ரக மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 105.4 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 14.52 சதவீத வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈராக் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு எடுத்த தீர்மானத்தையடுத்து மசகு எண்ணெய் விலை குறைந்திருந்தது.இருப்பினும், தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக எண்ணெய் விலைகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement