மேலதிக நேர சேவைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (18) 4ஆவது நாளாகவும் தொடரும் என சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் தரப்பில் இருந்து தீர்வு கிடைக்காமையால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்தார்.
இதேவேளை, சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழில்சார் நடவடிக்கைகளினால் பெருமளவிலான கொள்கலன்கள் துறைமுக பரிசோதனை முற்றத்தில் தடைப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை, பல சுங்கச் சங்கங்கள் மேலதிக நேரச் சேவைகளில் இருந்து விலகி, தொழில்துறை நடவடிக்கையைத் தொடங்கின.
தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்த சுங்க அதிகாரிகள் மேலதிக நேர சேவைகளில் இருந்து விலகுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கை இன்று (18) 4ஆவது நாளாகவும் தொடரும் என சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதிகாரிகள் தரப்பில் இருந்து தீர்வு கிடைக்காமையால் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் அமில சஞ்சீவ தெரிவித்தார்.இதேவேளை, சுங்க தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழில்சார் நடவடிக்கைகளினால் பெருமளவிலான கொள்கலன்கள் துறைமுக பரிசோதனை முற்றத்தில் தடைப்பட்டுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.கடந்த வெள்ளிக்கிழமை, பல சுங்கச் சங்கங்கள் மேலதிக நேரச் சேவைகளில் இருந்து விலகி, தொழில்துறை நடவடிக்கையைத் தொடங்கின.