• Nov 28 2024

இணைய பயனாளர்களுக்கு கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Chithra / Feb 25th 2024, 12:15 pm
image

 

பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய சில இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கணினி ஹெக்கர்கள், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதாகக்  கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இணையத்தைப் பயன்படுத்தும் போது பயனாளர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்க  பல்வேறு பாதுகாப்பு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. 

ஆனால் சில அரச மற்றும் தனியார் இணையதளங்கள் மூன்றாம் தரப்பினருக்கு மிக எளிதாகத் தகவல்களைப் பெறும் திறனைக் கொண்டுள்ளன. 

முகநூல், வட்ஸ்அப், மின்னஞ்சல் போன்ற முக்கியமான தரவுகளை உள்ளடக்கிய தனிப்பட்ட கணக்குகள் கணினி  ஹெக்கர்களால்  திருடப்படலாம் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

எவ்வாறாயினும், இணையத்தளத்தில் சிலரின் தனிப்பட்ட தரவுகளை உள்ளிடுவது அவசியமானால், இதற்கு பொறுப்பானவர்கள் அந்த இணையத்தளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, 

அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்குப் பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

இணைய பயனாளர்களுக்கு கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை  பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய சில இணையத்தளங்களிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கணினி ஹெக்கர்கள், குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதாகக்  கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.இணையத்தைப் பயன்படுத்தும் போது பயனாளர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்க  பல்வேறு பாதுகாப்பு உத்திகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் சில அரச மற்றும் தனியார் இணையதளங்கள் மூன்றாம் தரப்பினருக்கு மிக எளிதாகத் தகவல்களைப் பெறும் திறனைக் கொண்டுள்ளன. முகநூல், வட்ஸ்அப், மின்னஞ்சல் போன்ற முக்கியமான தரவுகளை உள்ளடக்கிய தனிப்பட்ட கணக்குகள் கணினி  ஹெக்கர்களால்  திருடப்படலாம் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், இணையத்தளத்தில் சிலரின் தனிப்பட்ட தரவுகளை உள்ளிடுவது அவசியமானால், இதற்கு பொறுப்பானவர்கள் அந்த இணையத்தளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்குப் பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement