• May 18 2026

வங்காள விரிகுடாவில் மீளவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி? வடகிழக்கில் இன்றும் மழை

Chithra / May 18th 2026, 8:17 am
image

எதிர்வரும் 30ஆம் திகதிக்கிடையில் மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலையின் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.


அத்துடன் இதன் உறுதித் தன்மையை அடுத்த சில நாட்களின் பின்னரே குறிப்பிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது - 


இன்று முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.


இதேவேளை 2026 தென்மேற்கு பருவக்காற்றின் உடைவு இலங்கையின் நிலப்பகுதிகளில் நாளை மறுதினமே (19.05.2026) நிகழவுள்ளது. இவ்வருட தென்மேற்கு பருவக்காற்று மழை இலங்கையின் சராசரியை அண்மித்ததாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளது.


சராசரியை விட 5-10 % குறைவாகவும் அமையலாம். மாதங்களின் அடிப்படையில் ஜுன், ஜுலை மாதங்கள் சராசரியை விட சற்று கூடுதலான அளவில் மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. 


ஆனால் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் சராசரியை விட குறைவான அளவு மழைவீழ்ச்சியைப் பெறும் வாய்ப்புள்ளது. 


வழமை போன்று இம்முறையும் தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் இலங்கையின் சப்ரகமுவ, தெற்கு, மேற்கு, வடமேற்கு மாகாணங்கள் மூன்று காலப்பகுதிகளில் அதீத மழையுடன் கூடிய வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன.


எனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது இரத்தினபுரி, காலி,  களுத்துறை மாவட்டங்கள் 2026ம் வருட தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் அதிக மழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எல்நினோ நேர் நிலைக்கு வரும் வாய்ப்புள்ளது. எல்நினோ என்பது தனித்து வரட்சியை மட்டுமல்ல, எதிர்பாராத வளிமண்டல குழப்பங்களோடு தொடர்புடையதாக மிகச்செறிவான மழைவீழ்ச்சியோடு கூடிய வெள்ள அனர்த்தங்களையும் உருவாக்க வல்லது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வங்காள விரிகுடாவில் மீளவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வடகிழக்கில் இன்றும் மழை எதிர்வரும் 30ஆம் திகதிக்கிடையில் மீளவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலையின் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.அத்துடன் இதன் உறுதித் தன்மையை அடுத்த சில நாட்களின் பின்னரே குறிப்பிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது - இன்று முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, குருநாகல் மாவட்டங்களுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.இதேவேளை 2026 தென்மேற்கு பருவக்காற்றின் உடைவு இலங்கையின் நிலப்பகுதிகளில் நாளை மறுதினமே (19.05.2026) நிகழவுள்ளது. இவ்வருட தென்மேற்கு பருவக்காற்று மழை இலங்கையின் சராசரியை அண்மித்ததாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளது.சராசரியை விட 5-10 % குறைவாகவும் அமையலாம். மாதங்களின் அடிப்படையில் ஜுன், ஜுலை மாதங்கள் சராசரியை விட சற்று கூடுதலான அளவில் மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஆனால் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் சராசரியை விட குறைவான அளவு மழைவீழ்ச்சியைப் பெறும் வாய்ப்புள்ளது. வழமை போன்று இம்முறையும் தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் இலங்கையின் சப்ரகமுவ, தெற்கு, மேற்கு, வடமேற்கு மாகாணங்கள் மூன்று காலப்பகுதிகளில் அதீத மழையுடன் கூடிய வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன.எனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது இரத்தினபுரி, காலி,  களுத்துறை மாவட்டங்கள் 2026ம் வருட தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் அதிக மழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்தின் பிற்பகுதியில் இருந்து எல்நினோ நேர் நிலைக்கு வரும் வாய்ப்புள்ளது. எல்நினோ என்பது தனித்து வரட்சியை மட்டுமல்ல, எதிர்பாராத வளிமண்டல குழப்பங்களோடு தொடர்புடையதாக மிகச்செறிவான மழைவீழ்ச்சியோடு கூடிய வெள்ள அனர்த்தங்களையும் உருவாக்க வல்லது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement