நுவரெலியா - ரொசல்ல கிராம பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் CCTV காணொளிக் காட்சிகளில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடொன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த எரிவாயு சிலிண்டரை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், காணொளியில் பதிவாகியுள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் அல்லது அவரை அடையாளம் காண முடிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட சந்தேகநபரை அடையாளம் காணும் எவரும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிசிடிவியில் சிக்கிய சிலிண்டர் திருடன்; தகவல் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை நுவரெலியா - ரொசல்ல கிராம பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் CCTV காணொளிக் காட்சிகளில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடொன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த எரிவாயு சிலிண்டரை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், காணொளியில் பதிவாகியுள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் அல்லது அவரை அடையாளம் காண முடிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனவும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், சம்பந்தப்பட்ட சந்தேகநபரை அடையாளம் காணும் எவரும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.