• Apr 02 2025

வழமைக்குத் திரும்பி வரும் திருகோணமலை மக்களின் அன்றாட நடவடிக்கைகள்

Chithra / Dec 1st 2024, 3:17 pm
image

 

நாட்டில்  கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வருவதால் போக்குவரத்து சேவைகள் உட்பட, அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பி வருகின்றது.

இந்நிலையில்  திருகோணமலை மாவட்டத்தில்  தற்போது,  அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பி இருக்கின்றன.

இந்த மாவட்டத்தில் கன மழையினால், ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த பத்து தினங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக, மழை பெய்யாததன் காரணமாகும் மாவட்டமெங்கும் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு படிப்படியாக வடிந்து வருகின்றது. 

இதனால் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பி உள்ளன.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி, வெருகல் பகுதியில் தடைபட்டிருந்த, பிரதான போக்குவரத்து மார்க்கம் தற்போது, வழமைக்கு திரும்பியிருக்கின்றது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து திருகோணமலை நகருக்கான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் வழமைக்குத்  திரும்பியுள்ளன. 

இதேவேளை, கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக, தொழிலுக்கு செல்ல முடியாது, தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் இருந்த மீனவர்கள், இன்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையை காண முடிந்தது. 

அதேபோன்று அங்காடி வியாபார நடவடிக்கைகளும் இன்று வழமைக்கு திரும்பியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 3372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்ததோடு, 15000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்து இருப்பதாகவும், வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார.


வழமைக்குத் திரும்பி வரும் திருகோணமலை மக்களின் அன்றாட நடவடிக்கைகள்  நாட்டில்  கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வருவதால் போக்குவரத்து சேவைகள் உட்பட, அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பி வருகின்றது.இந்நிலையில்  திருகோணமலை மாவட்டத்தில்  தற்போது,  அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் வழமைக்குத் திரும்பி இருக்கின்றன.இந்த மாவட்டத்தில் கன மழையினால், ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த பத்து தினங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக, மழை பெய்யாததன் காரணமாகும் மாவட்டமெங்கும் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு படிப்படியாக வடிந்து வருகின்றது. இதனால் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பி உள்ளன.திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதி, வெருகல் பகுதியில் தடைபட்டிருந்த, பிரதான போக்குவரத்து மார்க்கம் தற்போது, வழமைக்கு திரும்பியிருக்கின்றது.மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருந்து திருகோணமலை நகருக்கான போக்குவரத்து சேவைகள் அனைத்தும் வழமைக்குத்  திரும்பியுள்ளன. இதேவேளை, கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக, தொழிலுக்கு செல்ல முடியாது, தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் இருந்த மீனவர்கள், இன்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையை காண முடிந்தது. அதேபோன்று அங்காடி வியாபார நடவடிக்கைகளும் இன்று வழமைக்கு திரும்பியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 3372 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்ததோடு, 15000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் அழிவடைந்து இருப்பதாகவும், வெள்ளத்தினால் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார.

Advertisement

Advertisement

Advertisement