• Nov 22 2024

கொழும்பு – மும்பை இடையே தினசரி இரட்டை விமான சேவை! வெளியான அறிவிப்பு samugammedia

Chithra / Dec 4th 2023, 2:59 pm
image

 

கொழும்பு மற்றும் மும்பை நகரங்களுக்கிடையே  தினசரி இரட்டை விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே தினசரி இரட்டை விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி கொழும்பு மற்றும் மும்பைக்கு இடையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பையிலிருந்து வரும் பயணிகள் கொழும்பில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், லண்டன், பிராங்பேர்ட், பாரிஸ், மெல்போர்ன் மற்றும் சிட்னி போன்ற இடங்களுக்குச் செல்லவும் இதன் மூலம் வாய்ப்பளிக்கப்படுகின்றது.

மேலும் இது இந்தியாவிற்கு நிதி மற்றும் பொழுதுபோக்கு மூலதனத்திற்குச் செல்லும் பயணிகளின் வசதியைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது இந்தியாவில் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு 100க்கும் மேற்பட்ட விமானசேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – மும்பை இடையே தினசரி இரட்டை விமான சேவை வெளியான அறிவிப்பு samugammedia  கொழும்பு மற்றும் மும்பை நகரங்களுக்கிடையே  தினசரி இரட்டை விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே தினசரி இரட்டை விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி கொழும்பு மற்றும் மும்பைக்கு இடையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.மும்பையிலிருந்து வரும் பயணிகள் கொழும்பில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், லண்டன், பிராங்பேர்ட், பாரிஸ், மெல்போர்ன் மற்றும் சிட்னி போன்ற இடங்களுக்குச் செல்லவும் இதன் மூலம் வாய்ப்பளிக்கப்படுகின்றது.மேலும் இது இந்தியாவிற்கு நிதி மற்றும் பொழுதுபோக்கு மூலதனத்திற்குச் செல்லும் பயணிகளின் வசதியைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது இந்தியாவில் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு 100க்கும் மேற்பட்ட விமானசேவைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement