• Jun 30 2024

மக்கள் குடியிருப்புக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம்..! அச்சத்தில் வாழும் அம்பாறை மக்கள்

Chithra / Jun 12th 2024, 1:16 pm
image

Advertisement


  

அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் ஆற்றை விட்டு  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போது  இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9,5,4 அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிகுடிச்சா உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. 

மேற்படி  பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டவில்லையென மக்கள் கூறுகின்றனர்.

இதனால் முதலை அபாயம் தெரியாமல்  இப்பகுதியில்  மக்கள் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. 

இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் குடியிருப்புக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம். அச்சத்தில் வாழும் அம்பாறை மக்கள்   அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் ஆற்றை விட்டு  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.தற்போது  இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.குறிப்பாக இரவு நேரங்களில் சுமார் 9,5,4 அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கிட்டங்கி, மாவடிப்பள்ளி, சின்ன முகத்துவாரம், கஞ்சிகுடிச்சா உள்ளிட்ட களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன. மேற்படி  பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டவில்லையென மக்கள் கூறுகின்றனர்.இதனால் முதலை அபாயம் தெரியாமல்  இப்பகுதியில்  மக்கள் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement