மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கான உரிமத்தை வழங்குவதனால் சமூக சீரழிவுகள் ஏற்படக் கூடும் எனவும், உரிமம் வழங்குவதனை நிறுத்துமாறும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக கிளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னதாக அரசாங்கம் மதுபான விற்பனை நிலைய உரிமம் வழங்குவதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடு என்ற ரீதியில் எதிர்நோக்கியுள்ள பாரியளவான சமூக சீரழிவு நிலைமையாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் என்பனவற்றுக்கு அடிமையாவதனை குறிப்பிட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் சுயநலவாத பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் மதுபான விற்பனை நிலைய உரிமங்களை வழங்குவதனை மாநாயக்க தேரர்கள் என்ற ரீதியில் எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
சமூக கிளர்ச்சிகள் ஏற்படும் அபாயம். மகாநாயக்க தேரர்கள் அரசிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கான உரிமத்தை வழங்குவதனால் சமூக சீரழிவுகள் ஏற்படக் கூடும் எனவும், உரிமம் வழங்குவதனை நிறுத்துமாறும் மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.சமூக கிளர்ச்சிகள் ஏற்படுவதற்கு முன்னதாக அரசாங்கம் மதுபான விற்பனை நிலைய உரிமம் வழங்குவதனை நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பங்களுடன் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.நாடு என்ற ரீதியில் எதிர்நோக்கியுள்ள பாரியளவான சமூக சீரழிவு நிலைமையாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் என்பனவற்றுக்கு அடிமையாவதனை குறிப்பிட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.இவ்வாறான பின்னணியில் சுயநலவாத பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் மதுபான விற்பனை நிலைய உரிமங்களை வழங்குவதனை மாநாயக்க தேரர்கள் என்ற ரீதியில் எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.