• Oct 14 2026

விடிவதற்குள் வீடு தேடி வந்த ஆபத்து! முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம்

Chithra / Oct 14th 2026, 1:27 pm
image


முல்லைத்தீவில் அதிகாலை வேளையில் இரண்டு காட்டு யானைகள் வீட்டின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு வளவிற்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யோகபுரம் மத்தி கிராம அலுவலர் பிரிவில் இன்று (14) காலை 5.55 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு இரண்டு காட்டு யானைகள் திடீரென வீட்டுவளவிற்குள் நுழைந்துள்ளது.


போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி வரும் மக்கள், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதால் மக்கள் தமது உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.


இந்நிலையில், காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  

விடிவதற்குள் வீடு தேடி வந்த ஆபத்து முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்திய சம்பவம் முல்லைத்தீவில் அதிகாலை வேளையில் இரண்டு காட்டு யானைகள் வீட்டின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு வளவிற்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யோகபுரம் மத்தி கிராம அலுவலர் பிரிவில் இன்று (14) காலை 5.55 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் நுழைவாயிலை உடைத்துக்கொண்டு இரண்டு காட்டு யானைகள் திடீரென வீட்டுவளவிற்குள் நுழைந்துள்ளது.போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி வரும் மக்கள், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதால் மக்கள் தமது உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில், காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து பொதுமக்களையும் அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement