சவூதி அரேபியாவிற்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக, சவூதி அரேபியாவிற்கான சர்வதேச விமானச் சேவைகளில் திடீர் தாமதங்கள் மற்றும் ரத்துச் செய்யப்படுதல் உள்ளிட்ட தடங்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், உம்ரா புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகிவரும் இலங்கை யாத்ரீகர்கள் தமது பயண ஏற்பாடுகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பயணிகள் தங்களது பயண முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்து, விமானச் சேவைகளின் நிலைமையை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், பயணத்தின்போது எதிர்பாராத விதமாக ஏற்படக்கூடிய விமானத் தாமதங்கள், பயண ரத்துகள், தங்குமிடப் பிரச்சினைகள் மற்றும் ஏனைய அவசர நிலைமைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சவூதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கை யாத்ரீகர்கள் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அவசர தூதரக உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில், ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தையோ அல்லது ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தையோ தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா பயணத்தை மேற்கொள்ளவுள்ள இலங்கையர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணங்களைத் திட்டமிடுமாறு இலங்கைத் துணைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
உம்ரா செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை; சவூதியில் என்ன நடக்கிறது சவூதி அரேபியாவிற்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இலங்கையர்களுக்கு ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முக்கிய எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை காரணமாக, சவூதி அரேபியாவிற்கான சர்வதேச விமானச் சேவைகளில் திடீர் தாமதங்கள் மற்றும் ரத்துச் செய்யப்படுதல் உள்ளிட்ட தடங்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால், உம்ரா புனிதப் பயணத்தை மேற்கொள்ளத் தயாராகிவரும் இலங்கை யாத்ரீகர்கள் தமது பயண ஏற்பாடுகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக, பயணிகள் தங்களது பயண முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்து, விமானச் சேவைகளின் நிலைமையை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன், பயணத்தின்போது எதிர்பாராத விதமாக ஏற்படக்கூடிய விமானத் தாமதங்கள், பயண ரத்துகள், தங்குமிடப் பிரச்சினைகள் மற்றும் ஏனைய அவசர நிலைமைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, சவூதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கை யாத்ரீகர்கள் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் அவசர தூதரக உதவிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்களில், ஜெத்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தையோ அல்லது ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தையோ தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உம்ரா பயணத்தை மேற்கொள்ளவுள்ள இலங்கையர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயணங்களைத் திட்டமிடுமாறு இலங்கைத் துணைத் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.