• Oct 30 2026

இலங்கையில் மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ் நோய் - 6 மாவட்டங்களில் என்ன நடக்கிறது?

Chithra / Oct 29th 2026, 11:27 am
image


நாட்டின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (African Swine Fever) நோய் மீண்டும் பரவி வருவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.


குறித்த மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் சுமார் 1,200 பன்றிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் சுமார் 200 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு இந்த நோய் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டில் மீண்டும் சில பகுதிகளில் தொற்று பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 48 பண்ணைகளிலும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பன்றிகளுக்காவது நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் நோய் அல்ல என்பதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை எனவும் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.


இருப்பினும், இந்த வைரஸ் பன்றிகளிடையே வேகமாகப் பரவக்கூடியது என்பதால், பண்ணையாளர்கள் உரிய சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, சிறிய அளவில் பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் வீடுகளில் பன்றிகளை அறுத்து, அவற்றின் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதால் நோய் மேலும் வேகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.


எனவே, பன்றிப் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதுடன், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டல்களைக் கட்டாயம் பின்பற்றுமாறும் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பண்ணையாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என வைத்தியர் பிரதீப் குமாரவடு மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் பரவும் ஆபத்தான வைரஸ் நோய் - 6 மாவட்டங்களில் என்ன நடக்கிறது நாட்டின் பல பகுதிகளில் உள்ள பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (African Swine Fever) நோய் மீண்டும் பரவி வருவதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.குறித்த மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் சுமார் 1,200 பன்றிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவற்றில் சுமார் 200 பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த நோய் பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டில் மீண்டும் சில பகுதிகளில் தொற்று பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 48 பண்ணைகளிலும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பன்றிகளுக்காவது நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் நோய் அல்ல என்பதால், பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டியதில்லை எனவும் வைத்தியர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.இருப்பினும், இந்த வைரஸ் பன்றிகளிடையே வேகமாகப் பரவக்கூடியது என்பதால், பண்ணையாளர்கள் உரிய சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, சிறிய அளவில் பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் வீடுகளில் பன்றிகளை அறுத்து, அவற்றின் கழிவுகளை நீர்நிலைகளில் கொட்டுவதால் நோய் மேலும் வேகமாகப் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.எனவே, பன்றிப் பண்ணைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதுடன், விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தொழில்நுட்ப வழிகாட்டல்களைக் கட்டாயம் பின்பற்றுமாறும் பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பண்ணையாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என வைத்தியர் பிரதீப் குமாரவடு மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement