வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகளின் கட்டிட திறப்பு விழாவும் பொங்கல் விழாவும் இன்று (06) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கறுவாக்கேணி வாழைச்சேனையில் இடம்பெற்றது.
வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஆலோசகர் ச.சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாள் ஆர்.கங்காதரன் சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் அகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு கட்டிடத்தினை வைபவரீதியாக திறந்து வைத்தனர்.
நீண்ட காலமாக கோறளைப்பற்று பிரதேசத்தில் வாழும் மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நிலையான கட்டம் ஒன்று இல்லாதது முக்கிய குறைபாடாக காணப்பட்டது. தங்களது நிலைமை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவர் தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மூலம் 30 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.
வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகளின் கட்டிடத் திறப்பு வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகளின் கட்டிட திறப்பு விழாவும் பொங்கல் விழாவும் இன்று (06) கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கறுவாக்கேணி வாழைச்சேனையில் இடம்பெற்றது.வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஆலோசகர் ச.சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாள் ஆர்.கங்காதரன் சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர் அகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு கட்டிடத்தினை வைபவரீதியாக திறந்து வைத்தனர்.நீண்ட காலமாக கோறளைப்பற்று பிரதேசத்தில் வாழும் மாற்றுத் திறனாளிகளின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நிலையான கட்டம் ஒன்று இல்லாதது முக்கிய குறைபாடாக காணப்பட்டது. தங்களது நிலைமை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து அவர் தமது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மூலம் 30 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார்.