• May 05 2024

புதிய கூட்டணியில் தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ள தயாசிறி! மைத்திரிக்கும் அழைப்பு

Chithra / Mar 17th 2024, 9:10 am
image

Advertisement

 

தனது புதிய அரசியல் பயணத்தை மனித நேயக் கூட்டணியுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பலரும் இக்கூட்டணியில் இணையவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இக்கூட்டணியில் இணைந்து பயணிக்க அழைப்பு விடுப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

புதிய கூட்டணி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எவ்வாறிருப்பினும் தான் ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுச் செல்லப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

புதியதொரு பயணமாகவே 'மனித நேயக் கூட்டணி' ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இருண்ட, இக்கட்டான அரசியல் நிலைமைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இக்கூட்டணி உதயமாகியுள்ளது.

மக்களுக்கு தற்போது புதிய கட்சி, புதிய தலைமைத்துவமே தேவைப்படுகிறது.

புதிய தலைமைத்துவத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அவ்வாறு ஒருவர் வருவார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் காணப்படுகிறது. 

ஆனால் எவ்வாறிருப்பினும் நான் நீல நிறத்தையோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ விட்டுச் செல்ல மாட்டேன்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கத்துவம் வகித்துக் கொண்டு, கூட்டணியொன்றை அமைப்பது எந்த வகையிலும் அந்த கட்சிக்கு பாதிப்பாக அமையாது. புதிய கூட்டணியை தோற்றுவிப்பதன் மூலம், நான் சுதந்திர கட்சியை விட்டுச் செல்கின்றேன் என்று அர்த்தமல்ல. என்றார்.

புதிய கூட்டணியில் தனது அரசியல் பயணத்தை தொடரவுள்ள தயாசிறி மைத்திரிக்கும் அழைப்பு  தனது புதிய அரசியல் பயணத்தை மனித நேயக் கூட்டணியுடன் ஆரம்பிக்கவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பலரும் இக்கூட்டணியில் இணையவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இக்கூட்டணியில் இணைந்து பயணிக்க அழைப்பு விடுப்பதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.புதிய கூட்டணி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,எவ்வாறிருப்பினும் தான் ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுச் செல்லப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.புதியதொரு பயணமாகவே 'மனித நேயக் கூட்டணி' ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இருண்ட, இக்கட்டான அரசியல் நிலைமைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இக்கூட்டணி உதயமாகியுள்ளது.மக்களுக்கு தற்போது புதிய கட்சி, புதிய தலைமைத்துவமே தேவைப்படுகிறது.புதிய தலைமைத்துவத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அவ்வாறு ஒருவர் வருவார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் காணப்படுகிறது. ஆனால் எவ்வாறிருப்பினும் நான் நீல நிறத்தையோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ விட்டுச் செல்ல மாட்டேன்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கத்துவம் வகித்துக் கொண்டு, கூட்டணியொன்றை அமைப்பது எந்த வகையிலும் அந்த கட்சிக்கு பாதிப்பாக அமையாது. புதிய கூட்டணியை தோற்றுவிப்பதன் மூலம், நான் சுதந்திர கட்சியை விட்டுச் செல்கின்றேன் என்று அர்த்தமல்ல. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement