சிவனடி பாத மலையில் தரிசனம் செய்து விட்டு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அவிசாவளை தெஹியோவிற்ற பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு வருகை தந்த குறித்த குடும்பஸ்தர் , சிவனடி பாத மலை தரிசனத்தை முடித்து நேற்றிரவு(25) மீண்டும் வீடு திரும்பும் வேளையில் திடீரென கடும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது.
இந்நிலையில், அவரை நோயாளர் காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
78 வயதுடைய டபிள்யூ.குணவர்தன என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிவனொளிபாதமலை தரிசனத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் மரணம். பக்தர்கள் அதிர்ச்சி. சிவனடி பாத மலையில் தரிசனம் செய்து விட்டு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அவிசாவளை தெஹியோவிற்ற பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு வருகை தந்த குறித்த குடும்பஸ்தர் , சிவனடி பாத மலை தரிசனத்தை முடித்து நேற்றிரவு(25) மீண்டும் வீடு திரும்பும் வேளையில் திடீரென கடும் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது.இந்நிலையில், அவரை நோயாளர் காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.78 வயதுடைய டபிள்யூ.குணவர்தன என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.