பொலிஸ் அதிகாரிகளுக்கான நிலுவை உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நிதிப் பற்றாக்குறை காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் அதிகாரியும் குறைந்தபட்சமாக 28,500 ரூபா உதவித் தொகையை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த நிலுவைத் தொகையை செலுத்தும் பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்
பொலிஸ் அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்க தீர்மானம். பொலிஸ் அதிகாரிகளுக்கான நிலுவை உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு அறிவித்துள்ளது.நிதிப் பற்றாக்குறை காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் அதிகாரியும் குறைந்தபட்சமாக 28,500 ரூபா உதவித் தொகையை பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், இந்த நிலுவைத் தொகையை செலுத்தும் பணிகள் அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்