• Jan 11 2025

கிராம உத்தியோகத்தருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு..!

Sharmi / Dec 30th 2024, 3:33 pm
image

கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூலாக்காடு கிராம உத்தியோகத்தரை சமூக வலைத்தளமொன்றில் அர சேவைக்கும் மற்றும் தன்மானத்திற்கும் அவதூறு விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை செவ்வியாக வழங்கியமையை கண்டித்தும் கிராம சேவகருக்கு ஆதரவு தெரிவித்தும், கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(30) கிரான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

இப் போராட்டத்தில் பூலாக்காடு,பெரியவேரம்,வட்டிபோட்ட மடு,அம்புஸ்குடா,ஆனசுட்ட பொத்தானை மற்றும் பொண்டுகள்சேனை,ஆகிய கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் பங்கு பற்றியிருந்தனர்.

கிரான் புலிபாய்ந்தகல் வீதியில் ஒன்று கூடியவர்கள் கையில் வாசகங்கள் ஏந்திய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக பிரதேச செயலக முன்வாயிலை வந்தடைந்தனர்.

'தூண்டாதே.தூண்டாதே வன்முறையை தூண்டாதே சமூக வலைத்தளமே',  'நீதி வேண்டும் நீதி வேண்டும்,  கிராமசேவகருக்கு நீதி வேண்டும்.' 'நிறுத்துங்கள் நிறுத்துங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை நிறுத்துங்கள்,' 'பொய்யான தகவல்களை வெளியிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்து என்பன போன்ற கோஷங்களை இதன்போது எழுப்பினார்கள்.

பின்னர் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் 3 கிராமங்களை சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கையளித்தனர்.

கோரிக்கை அடங்கிய மகஜரை பெற்றுக்கொண்டவர் உரிய நடவடிக்கைக்கைக்காக பிரதேச செயலாரிடம் கையளிப்பதாக இதன்போது தெரிவித்தார்.

தங்களது கிராமத்தில் இயங்கும் மாதர் சங்க பிரதிநிதிகள் பல வருட காலமாக இவ் அமைப்பில் இயங்கி வருவதாகவும் இவர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்குரிய பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாகவும் , மேலும் அரச சொத்துக்களை தாங்கள் கையகப்படுத்தி வைத்திருப்பதுடன் சில நாட்களாக கிராம உத்தியோகத்தரை மானபங்கப்படுத்தும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இவர்களை விசாரணைக்குட்படுத்துவதோடு இவர்களிடமுள்ள அரச சொத்துக்களை பறிமுதல் செய்து புதிய மாதர் சங்கத்தினை அமைத்து தருவதுடன் எமது கிராமசேவகர் எவ்வித இலஞ்சம் ஊழலும் புரியாதவர் என்பதுடன் எமது கிராமத்தில் சேவையாற்றும் அரச உத்தியோகத்தர்களை எவ்வித இடையூறுமின்றி அச்சுறுத்தலின்றி கடமையாற்ற வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் 'யூ ரியுப்' வலைத்தள நபர் ஒருவர் குறித்த பிரதேசத்திற்கு சென்று மாதர் சங்க உறுப்பினர்களினை செவ்வி கண்டு அங்கு கடமையாற்றும் கிராமசேவகருக்கு எதிரான பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இச் செயலானது பிரதேசத்தில் அமைதியின்மையும்,அசாதாரண சூழ்நிலையையும் ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் அங்கு கடமையாற்றும்  கிராமசேவை உத்தியோகத்தர்களிடையே அதிருப்தி இன்மை நிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கிராம உத்தியோகத்தருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு. கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூலாக்காடு கிராம உத்தியோகத்தரை சமூக வலைத்தளமொன்றில் அரச சேவைக்கும் மற்றும் தன்மானத்திற்கும் அவதூறு விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை செவ்வியாக வழங்கியமையை கண்டித்தும் கிராம சேவகருக்கு ஆதரவு தெரிவித்தும், கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று(30) கிரான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.இப் போராட்டத்தில் பூலாக்காடு,பெரியவேரம்,வட்டிபோட்ட மடு,அம்புஸ்குடா,ஆனசுட்ட பொத்தானை மற்றும் பொண்டுகள்சேனை,ஆகிய கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் பங்கு பற்றியிருந்தனர்.கிரான் புலிபாய்ந்தகல் வீதியில் ஒன்று கூடியவர்கள் கையில் வாசகங்கள் ஏந்திய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக பிரதேச செயலக முன்வாயிலை வந்தடைந்தனர்.'தூண்டாதே.தூண்டாதே வன்முறையை தூண்டாதே சமூக வலைத்தளமே',  'நீதி வேண்டும் நீதி வேண்டும்,  கிராமசேவகருக்கு நீதி வேண்டும்.' 'நிறுத்துங்கள் நிறுத்துங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை நிறுத்துங்கள்,' 'பொய்யான தகவல்களை வெளியிட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்து என்பன போன்ற கோஷங்களை இதன்போது எழுப்பினார்கள்.பின்னர் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜரை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் 3 கிராமங்களை சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் கையளித்தனர்.கோரிக்கை அடங்கிய மகஜரை பெற்றுக்கொண்டவர் உரிய நடவடிக்கைக்கைக்காக பிரதேச செயலாளரிடம் கையளிப்பதாக இதன்போது தெரிவித்தார்.தங்களது கிராமத்தில் இயங்கும் மாதர் சங்க பிரதிநிதிகள் பல வருட காலமாக இவ் அமைப்பில் இயங்கி வருவதாகவும் இவர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்,அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோரை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்குரிய பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதாகவும் , மேலும் அரச சொத்துக்களை தாங்கள் கையகப்படுத்தி வைத்திருப்பதுடன் சில நாட்களாக கிராம உத்தியோகத்தரை மானபங்கப்படுத்தும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் இவர்களை விசாரணைக்குட்படுத்துவதோடு இவர்களிடமுள்ள அரச சொத்துக்களை பறிமுதல் செய்து புதிய மாதர் சங்கத்தினை அமைத்து தருவதுடன் எமது கிராமசேவகர் எவ்வித இலஞ்சம் ஊழலும் புரியாதவர் என்பதுடன் எமது கிராமத்தில் சேவையாற்றும் அரச உத்தியோகத்தர்களை எவ்வித இடையூறுமின்றி அச்சுறுத்தலின்றி கடமையாற்ற வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.கடந்த வாரம் 'யூ ரியுப்' வலைத்தள நபர் ஒருவர் குறித்த பிரதேசத்திற்கு சென்று மாதர் சங்க உறுப்பினர்களினை செவ்வி கண்டு அங்கு கடமையாற்றும் கிராமசேவகருக்கு எதிரான பல கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.இச் செயலானது பிரதேசத்தில் அமைதியின்மையும்,அசாதாரண சூழ்நிலையையும் ஏற்படுத்தியிருந்தது.அத்துடன் அங்கு கடமையாற்றும்  கிராமசேவை உத்தியோகத்தர்களிடையே அதிருப்தி இன்மை நிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement