• Apr 30 2025

நீதிபதிக்கு எதிராக அவதூறு; ஆறு சமூக வலைத்தள கணக்குகள் குறித்து விசாரணை ஆரம்பம்

Chithra / Apr 29th 2025, 9:31 am
image

 

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் தனக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் பிள்ளையானுக்கு பிணை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு போலியான தகவல்கள் மற்றும் தனது தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கி குறித்த சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக தனக்கு அவதூறு விளைவிக்கப்படுவதாக அவர் குறித்த புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையின் பேரில் குறித்த ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக தகவல்களைப் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி அனுமதி வழங்கியுள்ளார்.

நீதிபதிக்கு எதிராக அவதூறு; ஆறு சமூக வலைத்தள கணக்குகள் குறித்து விசாரணை ஆரம்பம்  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் தனக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் பிள்ளையானுக்கு பிணை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு போலியான தகவல்கள் மற்றும் தனது தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கி குறித்த சமூக வலைத்தள கணக்குகள் ஊடாக தனக்கு அவதூறு விளைவிக்கப்படுவதாக அவர் குறித்த புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனையடுத்து பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையின் பேரில் குறித்த ஆறு சமூக ஊடக கணக்குகள் தொடர்பாக தகவல்களைப் பெறுவதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணைய கண்காணிப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி அனுமதி வழங்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement