• Nov 29 2024

உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு..!

Chithra / Nov 28th 2024, 8:44 am
image

 

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக விவசாய அமைச்சு  முன்னதாக  தெரிவித்தது.

உர மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உர மானியத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வு.  விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாய் உர மானியம் வழங்கப்படுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக விவசாய அமைச்சு  முன்னதாக  தெரிவித்தது.உர மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வழங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement