• Dec 14 2024

உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர்- பிரதமர் ஹரினி சந்திப்பு..!

Sharmi / Nov 28th 2024, 8:45 am
image

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும்  உலக வங்கியின் நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லெனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(26) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போது நடைபெற்று வரும் கடன் மறுசீரமைப்பு செயல்முறை, இலங்கையின் சமூகப் பாதுகாப்புக் கொள்கை, காலநிலை மாற்றத்தைத் தணிக்க அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளியை நீக்குவது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் முகாமையாளர் கெவோர்க் சர்க்சியன், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஹிமாலி போகொடேகெதர, உலக பிரதிப் பணிப்பாளர் வெளிவிவகார திணைக்களத்தின் வங்கிப் பிரிவு ரஞ்சித் குருசிங்க, வெளிவிவகார அமைச்சின் புத்திக்க விமலசேன, பொருளாதார விவகாரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.



உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர்- பிரதமர் ஹரினி சந்திப்பு. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும்  உலக வங்கியின் நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் சிஸ்லெனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(26) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.தற்போது நடைபெற்று வரும் கடன் மறுசீரமைப்பு செயல்முறை, இலங்கையின் சமூகப் பாதுகாப்புக் கொள்கை, காலநிலை மாற்றத்தைத் தணிக்க அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளியை நீக்குவது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.மாலைதீவு மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் முகாமையாளர் கெவோர்க் சர்க்சியன், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஹிமாலி போகொடேகெதர, உலக பிரதிப் பணிப்பாளர் வெளிவிவகார திணைக்களத்தின் வங்கிப் பிரிவு ரஞ்சித் குருசிங்க, வெளிவிவகார அமைச்சின் புத்திக்க விமலசேன, பொருளாதார விவகாரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement